கண்ணில் பட்ட தெய்வத்தை கையெடுத்து கும்பிட யாரால் வேண்டுமானாலும் முடியும். ஆனால் அனைத்து மாயவலைகளையும் தாண்டி தன்னை படைத்தவனை கண்டறிந்து அவனுக்கு மட்டுமே தன் தலையை பணிந்து கொள்ளும் கொடுப்பினை சிலரருக்கு மட்டுமே வாய்க்கும். அவ்வாறு இந்த முவுலகையும் படைத்து காக்கும் முழுமுதல் ஏக இறையான சிவசக்தியின் தூய அடியாராக இருப்பவர்தான் தீந்தமிழ்த் திருச்சைவப் பெருநெறியாளர் ஐயா புதின் சுரேஷ் அவர்கள். சைவ சமயத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து , சொற்பொழிவுகள் வகுப்புகள் புத்தகங்கள் என எண்ணற்ற தன் ஆக்கங்களை இந்த தமிழ் சமூகத்திற்கு வழங்கியுள்ளார்.
சிவநெறி மட்டுமின்றி நம் தமிழ் மரபில் பொதிந்துள்ள பல ஆரோக்கியம் சார்ந்த வாழ்வியல் வழிமுறைகளையும் நமக்கு வழங்கியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது மதிப்புக்குரிய ஐயா திரு ஹீலர் பாஸ்கர் அவர்களின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள நித்திய பஞ்ச சுத்தி முறை மற்றும் போக யோகம் போன்ற ஆகச் சிறந்த வகுப்புகளாகும். இன்றும் அவருடைய anatomictherapy.org என்ற இணையத்தில் ஐயாவினுடைய வகுப்புகளை காணலாம். மேலும் சிவநெறி சார்ந்த பல வகுப்புகளையும் நிகழ்வுகளையும் தமிழக முழுவதும் நம் நடத்தி வருகிறார். இதனால் பயன் பெற்றவர்கள் ஏராளம். இவருடைய புத்தகங்கள் ஒவ்வொன்றும் யாரும் இதுவரை சொல்லிடாத பல அரிய தகவல்களை கொண்டுள்ளது.
குறிப்பாக நித்திய பஞ்ச சுத்தி முறை மற்றும் பட்ச சுத்தியும் பிரதோஷ விரதமும் என்ற இரு புத்தகங்கள். இந்த இரு புத்தகங்களும் மிகவும் அதிசயமான படைப்புகள் என்றே சொல்லலாம்.
இவரின் சிவ பக்தியின் உச்சம்தான் இவர் இயற்றிய சிவபுராணம் புதின் வடிவில் என்ற புத்தகம். வாழ்வியல் எதார்த்தத்தையும் தத்துவங்களையும் பேசும் ஒரு தனித்துவமான படிப்பு. சிவபுராணத்தை இவ்வாறு மிகவும் எளிமையான ஒரு கவித்துவ கோணத்தில் இதுவரை யாரும் பார்த்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே. இதனுடைய கலைநயமான வடிவமைப்பு இனி ஒருவரால் இதனை செய்ய முடியுமா! என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. சினிமாவாக இருந்திருந்தால் பல விருதுகள் கிடைத்திருக்கும். புதின் சுரேஷ் என்று இணையத்தில் தேடினால் எண்ணற்ற காணொளிகள் கருத்துக்கள் வந்து குவியும். ஏக இறைவன் சிவபெருமானின் அருளும், இத்தனை காலம் விடாமுயற்சியின் பலனுமே இன்று இவரை சமூகத்திற்கு அடையாளப்படுத்தியிருக்கிறது. அறிவுள்ள மக்களாகிய நாம் இவரை பயன்படுத்திக்கொண்டு சிவநெறியை அறிந்து நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய குழப்பங்களையும் தீமைகளையும் போக்கி இன்பம் பெருக்கி வாழ்வாங்கு வாழ்வோம்.
திருச்சிற்றம்பலம் !!!
