கட்டுரைகள்
7 கட்டுரைகள்

அன்பே சிவம்- 2
அன்பு இன்னது என்று தெரிந்த பிறகு அன்போடு நாம் எவ்வாறு இருப்பது என்ற கேள்வி வரும். அன்போடு இருத்தல் என்பது நாம் சுய நினைவோடு எடுக்கும் தன் முடிவா? நம் பிறப்பிலேயே கிடைக்கப்பெறும் பிறவி இயல்பா? இரண்டும். நம்மிடம் அன்பு உள்ளதா என்பதை நாமே புரிந்து கொள்ளுதல் மிக அவசியம். நம்மைப் பொறுத்தவரை நாம் நல்லவர்களே. அன்புமிக்கவர்களே. தன்னுடைய இருண்ட பக்கங்களை பார்க்கும் பக்குவமும் தன்னடக்கமும் நம்மில் பலருக்கு இல்லை. இது ஒரு வகையில் நல்லதே. இறை உணர்வு இல்லாத மனது தன் இருள் பக்கங்களை அறிந்தால் குற்ற உணர்ச்சியில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். ஆகையால் தன்னைத்தானே தற்பாதுகாத்துக்கொள்ள , குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிக்க நம் மனது நம்மை நல்லவன் என்று சமாதானம் செய்யும். இருப்பினும் அது உண்மை இல்லை என்பதால்; அது ஒரு மாயை என்பதால், அதன் இறுதி இலக்கு நன்மையானது அல்ல அத்தகைய தற்காப்பு நம்மை இறைவனிடம் இட்டுச் செல்லாது. நாம் என்ன தவறு செய்கிறோம் என்று நாமே அறியாத வண்ணம், நம்மை அதை அறிவதில் இருந்து தற்காத்து தீமைக்கும் பாவச் செயல்களுக்கும் வழிவகுக்கும். மாயையை வெல்லும் ஒரே வழி / முதல் படி ஆணவத்தை அழித்தல். ஆணவம் அழித்தலை இன்னும் புரியும்படி சொன்னால் தன்னை தாழ்த்திக் கொள்ளுதல் எனலாம். இறைவன் முன்பு, பெரியோர் முன்பு, சத்தியத்தின் முன்பு, இயற்கையின் முன்பு, தன் மனசாட்சியின் முன்பு பணிந்து வணங்கி தன்னை தாழ்த்திக் கொள்ளுதலே ஆணவத்தை அழித்தல் ஆகும். இதில் இறைவன், பெரியோர்….. போன்ற ஒவ்வொரு சொல்லும் ஆழமான உட்பொருள் கொண்டது. இவ்வாறு நாம் நம்மை தாழ்த்திக் கொள்ள நம் சுயம் விரிவடையும். நம்முடைய இருண்ட பக்கங்கள்நம்மை காயப்படுத்தாது ஆற்றுப்படுத்தும். அதிலிருந்து விடுவிக்கும். நம்மை தீர்வை நோக்கி நகர்த்தும். அதுதான் பதியாகிய இறைவனடி சேருதல். சரி, ‘சுயத்தை விரிவாக்குதல்’ என்றால் என்ன? நம் சுயத்தை நாம் எதனோடு தொடர்புபடுத்திக் கொள்கிறோம் என்பதுதான் நாம் அன்பு உடையவரா சுயநலவாதியா சாமானிய மனிதனா என்பதை வெளிப்படுத்தும்

அன்பே சிவம்! ஏன் கருணையே சிவம் இல்லை?
உலக சமயங்களை நாம் பார்க்கிறோம். அதில் இறைவனை பல்வேறு வகையில் வெளிப்படுத்துகின்றனர். ஒன்றில் மிக சாதுவாக. ஒன்றில் மிகக் கடுமையாக. ஒன்றில் அணுகுவதற்கு மிக கடினமானவனாக. ஒன்றில் எளிமையானவனாக. இவை அனைத்திலும் மனிதனுக்குண்டான குணாதிசயங்களை இறைவன் மேல் ஏற்றி கூறியதைப் போல் இருக்கும். அவை நல்ல கருத்துக்களை சொல்கிற போதும், இறைவனின் இயல்பான பண்பை அறியாது, நிறைவாகாத கருத்தாகவே இருக்கும். உலக சமயங்களிலேயே இறைவனை அவன் இருக்கும் இயல்பிலேயே உணர்ந்து அல்லது இறைவனால் உணர்த்தப் பெற்றிருக்கும் ஒரே சமயம் நம் சிவ செந்நெறியே ஆகும்.  அவ்வாறு உணர்வதற்கு மிக முக்கியமானது மரபும் மொழியுமாகும். மரபையும் கட்டமைத்து காத்து கடத்துவது மொழியே. மொழியின் விசாலம் சிந்தனையின் விசாலம். மொழியின் ஆழம் உணர்வின் ஆழம். பிற மொழிகளில் இல்லாத மிக உன்னதமான சிறப்புகள் தமிழ் மொழியில் உள்ளது. அதனை தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் சொற்களிலிருந்து அறியலாம். அதில் மிக முக்கியமான இரண்டு சொற்கள் **அன்பும் அறமும்** ஆகும். இந்த இரு சொற்களுக்கு இணையானச் சொற்கள் வேறு மொழிகளில் இருக்குமா என்றால் தெரியவில்லை ! இவை இறைவனின் இயல்புத் தன்மையை நேரடியாக வெளிப்படுத்தும் சொற்களாம். அறம் என்ற சொல்லை வேறொரு தருணத்தில் அறிந்து கொள்ள முற்படுவோம். அன்பை இப்போது புரிந்து கொள்வோம். எத்தனையோ சொற்கள் இருக்கின்றபோது இறைவனை அன்போடு ஒன்றுபடுத்தி 'அன்பே சிவம்' என்று ஏன் சொல்ல வேண்டும்? இரக்கம், பாசம், நேசம் இப்படி பல சொற்கள் இருக்கின்றன, ஏன் அன்பு? அன்பு என்பது மனித உணர்ச்சிகளிலிருந்து / உணர்வுகளிலிருந்து தோன்றுவதல்ல. அது இயற்கையில் உட்செறியப்பட்டிருக்கும் ஒன்று. இயற்கை என்பது சுயம்பு அல்ல. இறைவனின் சுய மடைமாற்றம். இறைவனின் இயல்புத் தன்மைகள் யாவும் அதில் தென்படும். அவ்வியல்புத் தன்மைகள் இயற்கையில் புரையோடி இருக்கும். அன்பு இறைவனிடமிருந்து வந்தது. இறைவனே அன்பாய் இருப்பதனால் இயற்கையிலும், அந்த இயற்கையோடு ஒன்றி வாழும் மனிதர்களிடத்திலும் அன்பு மலர்ந்து காணப்படுகிறது. அன்பு கொண்ட மனதின் அலைவரிசை இறைவனின் சித்தோடு/ உணர்வோடு ஒத்துப் போகிறது. (இறைவனிடமிருந்து அன்பை பெறுவதற்கு ஏதுவாய் அவர்கள் மனம் இருக்கிறது).

பெண்கள் அக்கமணி அணியலாமா?
எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் பெண்கள் அணிந்திருக்கலாம். தீட்டு நாட்களில் அணிந்திருந்தால் உருத்ராக்கம் தீட்டுப்பட்டுவிடும் என்று கூறுகிறார்கள். உருத்ராக்கத்தை தீட்டுப்படுத்த யாராலும் முடியாது. அதுஒரு புனிதமானது. நாம் எந்த தீட்டு நிலையிலும் அல்லது புனிதமற்ற நிலையிலும் இருந்தாலும் அந்தநேரத்தில் புனிதமான உருத்ராக்கம் அணிவதால் நாம் புனிதமடைகிறோம். எனவே வீட்டுக்கு விலக்கான நாட்களில் அவசியம் உருத்ராக்கம் அணிந்திருக்க வேண்டும். தீட்டு நாட்களில் பெண்களுக்கு முழுமையான ஓய்வு கிடைக்க வேண்டும். அப்போதுதான் தீட்டை வெளியேற்றும் செயலை உடலால் முழுமையாகச் செய்ய இயலும். சமைத்த உணவைச் சாப்பிட்ட பிறகு ஓய்வு கேட்டு உடல் சோம்பலை ஏற்படுத்தும் (உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு.) இது ஏனென்றால் உணவை சீரணிப்பதற்காக முழு சக்தியையும் செலவிட நினைக்கிறது உடல். உணவை சீரணிப்பதற்கே உடலின் சக்திகள் சிதறடிக்கப்படாமல் முழுமையாக தேவை எனும்போது கழிவுகளை வெளியேற்றும் கருப்பையின் செயல்பாட்டுக்கு முழு உடலின் ஒருங்கிணைந்த சக்தி எவ்வளவு அவசியம் என்று நினைத்துப் பாருங்கள் அந்த ஒருங்கிணைந்த முழுசக்தியை அவர்கள் உடல் பெறவேண்டும். என்பதற்காகத்தான் தீட்டு நாட்களின்போது பெண்களை ஓய்வில் வைத்திருந்தோம். பேதம் பார்த்து அவர்களை நாம் ஒதுக்கி வைக்கவில்லை. சைவத்தின் வாழ்வியல் பெண்களை ஒருபோதும் ஒதுக்கி வைத்ததில்லை. உருத்ராட்சத்தை சுட்டி, அட்டி, ஒட்டி மாட்டி என்று விதவிதமான அணிகலன்களாக செய்து அணிந்துகொள்ளலாம். திருமாங்கல்யத்தில் இணைத்து அணிந்து கொள்ளலாம்.

சிவமாகிய இறைவனிடமிருந்துதான் நாம் வந்தோம் என்பதை எவ்வாறு நம்புவது?
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. உயிரிலிருந்தே உயிர் தோன்றும் என்பது உங்கள் அறிவியல் விதி. தாய் தந்தையாகிய உயிர்களிடமிருந்தே நாம் தோன்றினோம். குரங்கு என்ற உயிரினத்திலிருந்தே மனித உயிரினம் தோன்றியது. இப்படியே பரிணாமத்தின் வேர்பிடித்துச் சென்றால் உலகத்தின் முதல் உயிரினம் கடல்நீரில் அமீபா என்ற ஒரு செல் உயிராக தோன்றின என்பர். அந்த உயிரும் உயிரிலிருந்துதானே தோன்றியிருக்க வேண்டும். அமீபா என்ற உயிர் எந்த உயிரிலிருந்து தோன்றியது என்றால் விடை சொல்லத் தெரியாது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரிய சந்திர இருசுடர்கள், இயமானன் ஆகிய எட்டு வடிவங்களாக இறைவன் இருக்கின்றான் என்று சைவநெறி கூறும் அந்த இயமானன் என்பதே உயிர் ஆகும். அந்த உயிரிலிருந்தே உயிர்கள் தோன்றி வளர்ந்தன. நாமும் அப்படித்தான் வந்தோம். உயிர்கள் மட்டும் அல்ல எல்லா உலகங்களும் எல்லா பொருட்களும் என அனைத்தும் இறைவனிடமிருந்து தோன்றி வந்தன. எல்லாம் இறைவனின் வியாபகத்தன்மையே. ஒன்றுமில்லாத ஒருமையாக - இறைவன் இருந்தான் அதனிடமிருந்து நாதம்(ஒலி) தோன்றியது அந்த ஒலிதான் பிரணவம் ஆகும். *"எல்லா உலகமும் எல்லா பொருளும் எண்ணறிய வள்ளாளன் ஆதி பரமசிவனது

கவலை அறுத்தல்
கவலையை அறுத்தால் தான் உங்களால் வாழமுடியும். உங்களைக் கவலைப்படுத்தும் விதமாக சிறிய அல்லது பெரிய நிகழ்வுகளால் நிறைந்ததுதான் வாழ்க்கை. அதே நேரத்தில் பிரம்மாண்டமான இன்பங்கள் உங்கள் வாழ்வில் கொட்டிக் கிடக்கின்றன. கவலைகளுக்காக உறங்கிக் கிடப்பதால் வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க முடியாது. எனவே கவலைகளை அறுத்து எறியுங்கள் கவலைகளை மறந்து தொலையுங்கள். மறதி என்பது வரம். “மனக்கவலை மாற்றல் அரிது” என்கிறது வள்ளுவம். எனவே கவலைகளையும் அதுகுறித்த நிகழ்வுகளையும் மறந்து போங்கள். நம்மை அடித்து அழுகவைத்த அப்பா ஆறுதல்படுத்த நமக்கு வாங்கித்தந்த லட்டை அழுதுகொண்டே சுவைத்து மகிழ்ந்து அப்பா அடித்ததை மறந்து போனவர்கள்தான் நாம். வாழ்வின் சின்னச்சின்ன இன்பங்களுக்குக் கூட அடிமைப்பட்டதுதான் நம் மனசு. அப்படிப்பட்ட இன்பங்களை அனுபவித்து கவலைகளை மறந்து போங்கள். மகிழ்ந்து வாழுங்கள் கவலைகளை மறக்கும்போதுதான் இலக்குகளை நோக்கி நாம் பயணிக்கத் துவங்குகிறோம். ### அ) மனக்கவலை

சைவத்தில் சாதி பேதம்
*"சாதி சமய சளைக்கை விட்டே நல் சோதியைக் கண்டேனடி"* என்கிறார் வள்ளல் பெருமான். சாதிசமய பேதமற்ற அன்புருவே இறைவன் அந்த சோதியைக் காணவேண்டும் என்றால் பேதங்களைக் கடந்த அன்பு வேண்டும். ஆதித் தமிழ்ச்சமூகத்தில் சாதிப்பாகுபாடு என்ற ஒன்றே கிடையாது. சாதிப்பாகுபாடெல்லாம் இங்கு பிழைக்க வந்தவர்கள், நம்மீது திணித்த பிரிவினை நஞ்சு. ஆதித்தமிழ் சமூகத்தில் குழுக்களாகப் பிரிந்து பிரிந்து பல தொழில் செய்துவந்தார்கள். ஒரு குழுவாகப் பிரிந்து குறிப்பிட்ட ஒரு தொழில் மட்டும் செய்யும்போது அந்த தொழில் சிறப்பாக அமையும் அந்தகுழுவில் இடம் பெற்றவர்கள் தொடர்ந்து அதே வேலையைச் செய்யும்போது அந்த தொழிலில் மேம்பட்டவர்களாக அவர்கள் திகழ்வார்கள். பிறகு ஒவ்வொரு குழுவும் தங்களின் தயாரிப்புக்களையோ அல்லது தங்களின் சேவைகளையோ மற்ற குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளும். இதன்மூலம் ஒட்டுமொத்த குழுக்களும் நேர்த்தியான சேவையையும், உயர்ந்த தயாரிப்புக்களையும் பெற முடிந்தது. இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் தொழில் சார்ந்த பெயர்களில் அழைக்கப்பட்டன. உதாரணமாக குயவர் குலம், மருத்துவர் குலம், வேளாளர்குலம், மறவர்குலம் என்று பெயர்கள் நீளும் இவர்களுக்கிடையில் தீண்டாமை பேதமோ, தாழ்மை உயர்வு பேதமோ இருந்ததில்லை. இந்த குழுக்களுக்குள் திருமண சம்பந்தம் உண்டு.

ராசிக்கற்கள் அணிவது பற்றிய உங்கள் கருத்து என்ன?
உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போக வேண்டுமானால் ராசிக்கற்களை அணிந்துகொள்ளுங்கள் என்று ராசிக்கல் வியாபாரிகள் கூறி வியாபாரம் செய்வார்கள். அவற்றை அணிந்து கொள்வதால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இந்தப் பிரச்சனைக்கு இந்தக் கல்லை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறி உங்களிடம் விற்பனை செய்யப்பட்ட கல்லை அணிந்து கொண்டு வீட்டில் வந்து டி.வியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அப்போது ஒரு ராசிக்கல் வியாபாரி டி.வியில் தோன்றி உங்களின் அதே பிரச்சனைக்கு வேறொரு கல்லை அணிய வேண்டும் என்று உங்கள் அறிவு நம்பும் விதத்தில் கூறுவார். நீங்களும் நம்பி அவரிடம் சென்று ஏற்கனவே வாங்கிய கல்லைவிட அதிக விலை கொடுத்து வேறொரு கல்லை வாங்கி அணிவீர்கள் இப்படியே அடுத்தடுத்து பல்வேறு வியாபாரிகள் பேசிபேசி உங்களை குழப்பிக்கொண்டே இருப்பார்கள் இதனால் நீங்கள் நிம்மதி இழந்து தவிப்பீர்கள். "சரக்கு முறுக்கா செட்டியார் முறுக்கா" என்ற தமிழ் வியாபார சொலவடை ஒன்று உண்டு. ராசிக்கல் வியாபாரத்தைப் பொறுத்தவரை சரக்கு முறுக்கு கிடையாது செட்டியாரே முறுக்கு அதாவது ராசிக்கல்லை விற்பனை செய்யும் வியாபாரிகளின் திறமைதான். இதில் பெரியது ராசிக்கல் என்ற சரக்கு சிறியது. ஏனெனில் அவைகள் சிறுதெய்வங்களோடு தொடர்புடையவைகள் எனவே அவற்றை அணிந்து கொள்ளக் கூடாது. ஆறாவது அறிவை தாண்டிய அறிவுநிலை பிறவியை எடுக்க விரும்புவர்களே அவற்றை அணிந்து கொள்வார்கள். இப்பிறவியோடு பிறப்பறுத்து இறைநிலை எய்த விரும்புபவர்கள் இவற்றை அணியமாட்டார்கள். இராசிக்கற்கள் எல்லாம் உண்மையா? போலியா? உண்மையான கற்களில் தோசமுள்ள கற்களா? தோசமில்லாத கற்களா? இந்தக்கல் இந்தப் பிரச்சனைக்கு உரிய கல்தானா? இல்லையா? இந்தக்கல் இந்த ராசிக்கான அல்லது இந்த நட்சத்திரத்திற்கான கல்லா? இல்லையா? இப்படி பல கேள்விகள் உங்களை துன்பமானவராக ஆக்க வேண்டுமானால் ராசிக்கல் அணிந்துகொள்ளுங்கள். நீங்கள் இன்பமாக வாழ வேண்டுமானால் ஆரோக்யமாக வாழவேண்டுமானால் இயற்கையின் கொடையாகிய உருத்ராக்கத்தை அணிந்துகொள்ளுங்கள்.
