சிவபுராணம்
மனப்பாடம் செய்து பாடும் பாடலா சிவபுராணம்?. மொத்த பாடலையும் வாசித்து பாடிவிட்டால் சிவபுராணம் படித்ததன் பலன் கிடைக்குமா ? இல்லை என்கிறார் மாணிக்கவாசகர். சிவபுராணத்தை பாடலாக படிப்பதோ பாடுவதோ பலனில்லை. மாறாக பாடலின் உள்ளார்ந்த பொருளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் . அதனைத்தான் மாணிக்கவாசகர் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் என்று அழுத்தமாக சொல்லியுள்ளார். அவ்வாறு மக்கள் சிவபுராணத்தின் ஒவ்வொரு வரியையும் சாதாரண விளக்க உரையாக இல்லாமல் ஆழமான உணர்வுரையாக புரிந்துகொள்ள ஐயா 'புதின் சுரேஷ்' அவர்கள் சிவபுராணம் புதின் வடிவில் என்ற, நூலை பிரம்மிப்பான கலைவடிவில் இயற்றியுள்ளார்.
