எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் பெண்கள் அணிந்திருக்கலாம். தீட்டு நாட்களில் அணிந்திருந்தால் உருத்ராக்கம் தீட்டுப்பட்டுவிடும் என்று கூறுகிறார்கள். உருத்ராக்கத்தை தீட்டுப்படுத்த யாராலும் முடியாது. அதுஒரு புனிதமானது. நாம் எந்த தீட்டு நிலையிலும் அல்லது புனிதமற்ற நிலையிலும் இருந்தாலும் அந்தநேரத்தில் புனிதமான உருத்ராக்கம் அணிவதால் நாம் புனிதமடைகிறோம்.
எனவே வீட்டுக்கு விலக்கான நாட்களில் அவசியம் உருத்ராக்கம் அணிந்திருக்க வேண்டும். தீட்டு நாட்களில் பெண்களுக்கு முழுமையான ஓய்வு கிடைக்க வேண்டும். அப்போதுதான் தீட்டை வெளியேற்றும் செயலை உடலால் முழுமையாகச் செய்ய இயலும். சமைத்த உணவைச் சாப்பிட்ட பிறகு ஓய்வு கேட்டு உடல் சோம்பலை ஏற்படுத்தும் (உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு.) இது ஏனென்றால் உணவை சீரணிப்பதற்காக முழு சக்தியையும் செலவிட நினைக்கிறது உடல்.
உணவை சீரணிப்பதற்கே உடலின் சக்திகள் சிதறடிக்கப்படாமல் முழுமையாக தேவை எனும்போது கழிவுகளை வெளியேற்றும் கருப்பையின் செயல்பாட்டுக்கு முழு உடலின் ஒருங்கிணைந்த சக்தி எவ்வளவு அவசியம் என்று நினைத்துப் பாருங்கள் அந்த ஒருங்கிணைந்த முழுசக்தியை அவர்கள் உடல் பெறவேண்டும். என்பதற்காகத்தான் தீட்டு நாட்களின்போது பெண்களை ஓய்வில் வைத்திருந்தோம். பேதம் பார்த்து அவர்களை நாம் ஒதுக்கி வைக்கவில்லை. சைவத்தின் வாழ்வியல் பெண்களை ஒருபோதும் ஒதுக்கி வைத்ததில்லை. உருத்ராட்சத்தை சுட்டி, அட்டி, ஒட்டி மாட்டி என்று விதவிதமான அணிகலன்களாக செய்து அணிந்துகொள்ளலாம். திருமாங்கல்யத்தில் இணைத்து அணிந்து கொள்ளலாம்.
