உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போக வேண்டுமானால் ராசிக்கற்களை அணிந்துகொள்ளுங்கள் என்று ராசிக்கல் வியாபாரிகள் கூறி வியாபாரம் செய்வார்கள். அவற்றை அணிந்து கொள்வதால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இந்தப் பிரச்சனைக்கு இந்தக் கல்லை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறி உங்களிடம் விற்பனை செய்யப்பட்ட கல்லை அணிந்து கொண்டு வீட்டில் வந்து டி.வியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அப்போது ஒரு ராசிக்கல் வியாபாரி டி.வியில் தோன்றி உங்களின் அதே பிரச்சனைக்கு வேறொரு கல்லை அணிய வேண்டும் என்று உங்கள் அறிவு நம்பும் விதத்தில் கூறுவார். நீங்களும் நம்பி அவரிடம் சென்று ஏற்கனவே வாங்கிய கல்லைவிட அதிக விலை கொடுத்து வேறொரு கல்லை வாங்கி அணிவீர்கள் இப்படியே அடுத்தடுத்து பல்வேறு வியாபாரிகள் பேசிபேசி உங்களை குழப்பிக்கொண்டே இருப்பார்கள் இதனால் நீங்கள் நிம்மதி இழந்து தவிப்பீர்கள். "சரக்கு முறுக்கா செட்டியார் முறுக்கா" என்ற தமிழ் வியாபார சொலவடை ஒன்று உண்டு.
ராசிக்கல் வியாபாரத்தைப் பொறுத்தவரை சரக்கு முறுக்கு கிடையாது செட்டியாரே முறுக்கு அதாவது ராசிக்கல்லை விற்பனை செய்யும் வியாபாரிகளின் திறமைதான். இதில் பெரியது ராசிக்கல் என்ற சரக்கு சிறியது. ஏனெனில் அவைகள் சிறுதெய்வங்களோடு தொடர்புடையவைகள் எனவே அவற்றை அணிந்து கொள்ளக் கூடாது. ஆறாவது அறிவை தாண்டிய அறிவுநிலை பிறவியை எடுக்க விரும்புவர்களே அவற்றை அணிந்து கொள்வார்கள். இப்பிறவியோடு பிறப்பறுத்து இறைநிலை எய்த விரும்புபவர்கள் இவற்றை அணியமாட்டார்கள்.
இராசிக்கற்கள் எல்லாம் உண்மையா? போலியா? உண்மையான கற்களில் தோசமுள்ள கற்களா? தோசமில்லாத கற்களா? இந்தக்கல் இந்தப் பிரச்சனைக்கு உரிய கல்தானா? இல்லையா? இந்தக்கல் இந்த ராசிக்கான அல்லது இந்த நட்சத்திரத்திற்கான கல்லா? இல்லையா? இப்படி பல கேள்விகள் உங்களை துன்பமானவராக ஆக்க வேண்டுமானால் ராசிக்கல் அணிந்துகொள்ளுங்கள். நீங்கள் இன்பமாக வாழ வேண்டுமானால் ஆரோக்யமாக வாழவேண்டுமானால் இயற்கையின் கொடையாகிய உருத்ராக்கத்தை அணிந்துகொள்ளுங்கள்.
